பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம் சார்பில், முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்கிடக் கோரி, பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.