நகராட்சி முன்பு கடைகள் கட்டும் பணி நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

218பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு, 3+1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில், மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகம் முன்பு கடைகள் கட்டும் பணியை தடை செய்யக்கோரி கோஷமிடப்பட்டது. பின்னர், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி