பெரம்பலூர்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

55பார்த்தது
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு மற்றும் ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது. அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மருத்துவ சிகிச்சை பெறும் NHIS பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதன் பலனை அனுபவிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

எனவே இதில் உள்ள குறைபாடுகளை களைந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பயன்பெறும் விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் மாவட்ட கருவூல அலுவலர் மூலமாக அரசுக்கு தங்களது கோரிக்கை மனுவை அனுப்பும் வகையில், ஆட்சியரிடமும் கருவூல அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சங்கங்களின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி