மாற்றத்திற்கான முன்முயற்சி 4. 0 என்ற தலைப்பில் பேரணி

0பார்த்தது
மாற்றத்திற்கான முன்முயற்சி 4. 0 என்ற தலைப்பில் பேரணி
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு 'புதிய உணர்வு - மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0' என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் இன்று (25.11.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார். 362க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற இந்தப் பேரணியில், குழந்தை திருமணம், குடும்ப வன்முறை, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் பெண் கல்வி ஊக்குவிப்பு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, பாலின சமத்துவ உறுதிமொழி எடுக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி