வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பேரணி

1பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, சங்குப்பேட்டை, பாலக்கரை, பேருந்து நிலையம் வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
Job Suitcase

Jobs near you