பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கொட்டரை நீர்த்தேக்கத்தின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷரண்யா இன்று (03.06.2026) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.