பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டியும், கையில் நீதி தராசு ஏந்தியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.