பெரம்பலூர் அரசுப் பள்ளியில்
நீட், ஜேஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு 'சூப்பர் 40' சிறப்பு மாதிரி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் 9ஆம் வகுப்பு மாணவர்களையும் சேர்க்கக் கோரி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினியிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.