மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை

3பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சி புதூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 15 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 19.11.2025 அன்று மதிய உணவாக புளி சாதம், அவித்த முட்டை, தக்காளி தொக்கு வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்ட 14 மாணவர்களில் 9 பேருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெறும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி