பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே கல்லாற்று பாலத்தில் சேலத்தில் இருந்து அரியலூருக்கு சிமெண்ட் மூலப்பொருள் ஏற்றிச்சென்ற 16 சக்கர டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை உடைத்து 20 அடி ஆழமுள்ள ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.