பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று காலை மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஒன்றரை மாத விடுமுறைக்குப் பிறகு, தங்கள் நண்பர்களைச் சந்தித்த மகிழ்ச்சியில் மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் சென்றனர். அவர்களை வரவேற்கும் விதமாக, ஆசிரியர்கள் பன்னீர் தெளித்தும், பூக்கள் மற்றும் சாக்லேட்டுகள் வழங்கியும் மாணவர்களை அன்புடன் வரவேற்றனர்.