பெரம்பலூர்: நூலகத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ

56பார்த்தது
பெரம்பலூர்: நூலகத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நூலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து சிறப்பு நூலகத்திற்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் குத்துவிளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கலாவல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் மற்றும் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி