பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், MRF நிறுவனத்தின் பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ், ரூ. 90 லட்சம் மதிப்பில் 2 புதிய வகுப்பறைகள் மற்றும் 2 ஸ்மார்ட் வகுப்பறைகள் என மொத்தம் 4 புதிய கூடுதல் வகுப்பறை கட்டடங்களை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. என். அருண்நேரு திறந்து வைத்தார். இந்த நிகழ்வு பள்ளியின் மேம்பாட்டிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.