பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தொகுதி II & IIA முதன்மைத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று 12.11.2025 தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இப்பயிற்சியில், தேர்வு எழுத ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.