திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் K. ஜோஷி நிர்மல் குமார், 11.11.2025 அன்று பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், தனிப்பிரிவு, சமூக நீதி (ம) மனித உரிமைகள் பிரிவு, மாவட்ட குற்ற ஆவணக்கூடம் ஆகிய பிரிவுகளை பார்வையிட்டு பதிவேடுகளை சரிபார்த்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, பணியை மேம்படுத்தும் அறிவுரைகளையும் காவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபாலசந்திரன், தலைமையிடம் பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) ஆகியோர் உடனிருந்தனர்.