பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தில் செந்தில் குமார் கட்டி வரும் வீட்டின் தண்ணீர் தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது மகிழன் மற்றும் 5 வயது பவின் ஆகிய இரண்டு சிறுவர்கள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாடலூர் போலீசார் இரு சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றி, உடல் கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.