பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகன ஓட்டிகள் நகராட்சி திடலில் உள்ள கட்டண இருசக்கர வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்தாமல், பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை எடுத்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தும், மீண்டும் அதே நிலை நீடித்ததால், போக்குவரத்து போலீசார் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர்.