பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு, கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் தங்கள் ஒற்றைக் கோரிக்கையான 4-ம் நிலை D - கிரேடு ஊதியம் வழங்கக் கோரி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் போராட்டம் 7-வது நாளாக தொடரும் நிலையில், நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.