விராலிப்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

80பார்த்தது
வெறிநாய் கடித்து உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் கேட்டும், வெறி நாய்களை பிடித்து வெளியில் விட வேண்டும் என, பழைய விராலிப்பட்டி கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், சிறுவயலூர் ஊராட்சிக்குட்பட்ட பழைய விராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர், இதனை தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில் தங்களது கிராமத்தில் வெறிநாய் கடித்து இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஆடுகள், 100க்கும் மேற்பட்ட கன்று குட்டி, மற்றும் மாடுகள் இறந்து விட்டது எனவும் இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுள்ளது இதற்காக ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இனிமேல் இதுபோல் நடைபெறாமல் இருக்க வெறி நாய்களை பிடித்து வெளியில் விட, நடவடிக்கை எடுக்கவும் இறந்து போன ஆடு மாடுகளுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கிடவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி