பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் நெய்குப்பை கிராம பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் ஒரே ஒரு நியாய விலை கடை மட்டுமே உள்ளதால், ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் வசிக்கும் 3வது மற்றும் 9வது வார்டு பகுதிகளில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீண்ட தூரம் வந்து பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. இதனால், கூடுதலாக ஒரு நியாய விலை கடை அமைத்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.