பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பெரியம்மாபாளையம் கிராம மக்கள், மூன்று டிரான்ஸ்பார்மர்களில் இருந்து காப்பர் காயில்கள் திருடப்பட்டதால் பத்து நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.