பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. லலித்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்தும், அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.