உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.

1பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் பத்மநாபன் ஆலோசனைப்படி, பெரம்பலூர் கௌதம புத்தர் உயர்நிலை பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் 52 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரண்யா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல் ஹமீது, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தமிழ்பாக்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றினர். பள்ளியின் தாளாளர் லில்லி கோபிநாத் அனைவரையும் வரவேற்று நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி