பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று, பிப்ரவரி 20, 2025 அன்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. S. அனிதா தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து உலக தாய்மொழி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறை அலுவலகங்களிலும் இந்த உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.