பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர், பூலாம்பாடி, மலையாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மக்காச்சோளப் பயிர்களும், வாழைகளும் சாய்ந்து விழுந்தன. இதனால் மகசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.