பெரம்பலூர்: நீர் நிலைகளில் இலவசமாக மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

663பார்த்தது
பெரம்பலூர்: நீர் நிலைகளில் இலவசமாக மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில், விவசாயிகள், மண்பாண்டம் செய்வோர் மற்றும் சொந்த வீட்டுப் பயன்பாட்டிற்கு வண்டல் மண், களிமண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இதற்காக https://www.tnesevai.tn.gov.in/Citizen/Home/Services.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, வட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். நீர்வள ஆதார துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், குட்டை, ஊரணிகளில் இருந்து இந்த மண் எடுக்கலாம்.

தொடர்புடைய செய்தி