திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. தபால் வாக்கு சீட்டு வேறொரு தொகுதிக்கு தவறாக அனுப்பப்பட்டதால் தேர்தல் முடிவு மாறியுள்ளதாகவும், இது போன்ற சூழலில் பின்பற்ற வேண்டிய நடைமுறையில் தெளிவில்லை என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், தேர்தல் நடைமுறைகள் முடிந்துவிட்டதால் இதனை முறையாக ஒரு தேர்தல் வழக்காக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தது.