பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச் சங்கத்தின், 1,121 ஒப்பந்த பணியாளர்களை 4 மாதங்களில் பணி நிரந்தரம் செய்ய திருச்சி பெல் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணி நிரந்தரம் செய்து உத்தரவிட மறுத்த மத்திய தொழிற் தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சொந்த ஊழியர்களையே பெல் நிறுவனம் அவுட்சோர்சிங் செய்த நடைமுறை நியாயமற்றது என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.