"அதிமுக தலைமையிலான கூட்டணி ஒரு கூட்டணியாகவே வடிவம் பெறவில்லை என்பதுதான் உண்மை" என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், “காங்கிரசின் நிலைப்பாடு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. தற்போது திமுக தலைமையில் என்னென்ன கட்சிகள் மேலும் இணைய வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கக்கூடிய முழுமையான அதிகாரம் முதலமைச்சருக்குதான் உள்ளது. அவருக்கு நாங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்க விரும்பவில்லை. கொடுக்கவும் மாட்டோம்” என்றார்.