தஞ்சாவூர் நகரில் வரும் 4-ஆம் தேதி நடைபெற உள்ள தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் விஜய், இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள், கூட்டணி நிலைப்பாடு மற்றும் அரசியல் விமர்சனங்களுக்கு பதிலடி குறித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே அதிகரித்துள்ளது.