தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சேலத்தில் வரும் 13ஆம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தார். மனுவில் மகுடஞ்சாவடி, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் அனுமதி கேட்டு இருந்தனர். இந்நிலையில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.