சீமைக் கருவேல மரங்களை அகற்ற 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்கவும், தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையில் 90% மரங்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், வட மாவட்டங்களில் இப்பணி சுணக்கமாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைப் பின்பற்றி கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் களமிறங்க வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.