அரசு வேலை வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல்

4பார்த்தது
அரசு வேலை வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு அரசு வேலை வழங்குவது சிபிஐ விசாரணையை பாதிக்கும் என வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்., 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யை பார்க்க கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இதனிடையே வரும் 10ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் செல்கிறார்.

தொடர்புடைய செய்தி