பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேரின் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததுடன் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய இருப்பதால் சரணடைய 4 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என அஸ்வத்தாமன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.