MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த சத்யபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், “அவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்” என சைதாப்பேட்டை வழக்கறிஞர் சுதன் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி அமர்வு, ‘இதுபோன்ற சட்டத்தை நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம்தான் இயற்ற முடியும்’ என தீர்ப்பளித்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.