SIR-ஐ எதிர்த்து தவெக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டுள்ளது. சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே வரும் 16ஆம் தேதி தவெக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. சுமார் 1,500 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்குவதுடன், உரிய பாதுகாப்பும் வழங்க கோரி தவெக சார்ப்பில் மனு வழங்கப்பட்டுள்ளது.