தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து ரூ.108.01க்கு விற்பனையாகிறது. நேற்று 43 காசுகள் உயர்ந்த நிலையில், இன்று 24 காசுகள் உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதே போல டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.99.78க்கு விற்பனையாகிறது. டீசல் விலை நேற்று 43 காசுகள் குறைந்த நிலையில், இன்று 23 காசுகள் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.