ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பரவும் தகவல் முற்றிலும் வதந்தி என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி தவறானது என்று PIB உண்மை சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற போலி செய்திகளை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, சந்தேகத்திற்குரிய தகவல்களின் உண்மைத்தன்மையை அறிய 87997 11259 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.