பிஎஃப் உச்சவரம்பை EPFO உயர்த்தப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிஎஃப் பிடிக்க உள்ள சம்பள உச்ச வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வரும் டிசம்பர் / ஜனவரி முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளது என தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி நடந்தால், தற்போது ரூ.1,800 ஆக உள்ள அதிகபட்ச பிஎஃப் பிடித்தம் ரூ.3,000 ஆக உயரும். இதனால் பணியாளர்களின் பிஎஃப் சேமிப்புத் தொகை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.