உலகில் முதன்முறையாக சீனாவில் மூளைச்சாவு அடைந்த 53 வயது நோயாளி ஒருவருக்கு, பன்றியின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்று உறுப்புகள் இரண்டும் ஐந்து நாட்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இன்றி மிக நன்றாகச் செயல்பட்டதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மருத்துவ உலகின் இந்த அரிய கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் மனித உறுப்புகளுக்கான பற்றாக்குறையை முழுமையாகச் சமாளிக்கப் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.