அமெரிக்காவில் H4 விசாதாரர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. H1B விசாவில் வசிப்பவரின் கணவரோ, மனைவியோ H4 விசாவின் கீழ் சட்டப்படி
வேலை செய்யத் தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய சட்டப்படி H4 விசாதாரர்கள் 10 ஆண்டுகள் வரை அமெரிக்காவில்
வேலை செய்ய அனுமதி உள்ளது. 2015-ல் அப்போதைய அதிபர் ஒபாமா காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த விதியை மாற்ற டிரம்ப் அரசு தீவிரம் காட்டி வருகிறது.