புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ரூ.4,000 பொங்கல் பரிசு தொகை வழங்க முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டதாக தகவல் வெளியாகின. இதற்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு கோரி நிதித்துறைக்கு ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதாகவும், போதிய நிதி இருப்பு இல்லை என கூறி அந்த ஆவணங்களை நிதித்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டிருந்தாலும், ரொக்க பணம் வழங்குவதற்காக திருத்தப்பட்ட பட்ஜெட் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.