கொலம்பியாவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி, தீப்பிடித்து எரிந்ததில் பாடகர் யெய்ஸன் ஜிமெனெஸ் உள்பட 6 உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. யெய்ஸன் ஜிமெனெஸ் மற்றும் அவரது குழுவினர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உயரத்திற்குச் செல்லத் தவறி, ஓடுபாதையின் இறுதிக்கு அருகிலுள்ள ஒரு வயலில் விமானம் விழுந்து நொறுங்கியது. அதிர்ச்சியூட்டும் விதமாக, பாடகர் விமான விபத்தில் இறப்பது போல் கனவு கண்டதாகக் கூறப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.