அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான கொலை முயற்சிகளைத் தொடர்ந்து, அவரது மகள்
இவான்கா டிரம்பைக் கொல்லத் தீட்டப்பட்ட சதி அம்பலமாகியுள்ளது. ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முகமது பக்கர், காசெம் சுலைமானி கொலையின் பழிவாங்கலாக புளோரிடாவில் உள்ள இவான்காவின் வீட்டின் வரைபடத்தைப் பகிர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார். மே 15 அன்று துருக்கியில் கைதான அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.