தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 3,412 மையங்களில் 8.27 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளாக தமிழ் மற்றும் இதர மொழித் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வுகள் 26-ம் தேதி வரை நடைபெறும். முறைகேடுகளைத் தடுக்க 4,540 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன; செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.