விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கீழக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி சுபஸ்ரீ, வீட்டு வேலை செய்ய சொன்னதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அரையாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த சுபஸ்ரீயிடம், அவரது தாய் சாந்தி துணி துவைக்கவும் சமைக்கவும் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.