மேகாலயா நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்த 18 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியுதவியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்க உத்தரவிட்டுள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.