PM கிசான் திட்டத்தின் 21 ஆவது தவணைத் தொகை எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், வருகிற நவ.15 ஆம் தேதிக்குள், விவசாயிகளின் வங்கி கணக்கில் 2,000 வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சரியான நேரத்தில் பணம் கிடைக்க, pmkisan.gov.in இணையதளத்தில் விவசாயிகள் தங்களது PM KISAN திட்ட கணக்கு, வங்கி கணக்கு ஆகியவற்றை அப்டேட் செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.