பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் இத
ுவரை 20 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 21வது தவணைக்கான எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் அது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.6,000 பெறுகிறார்கள், தலா ரூ.2,000 என மூன்று தவணையில் வழங்கப்படுகிறது. 21வது தவணை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் விவசாயிகள் தங்கள் மொபைல் எண்களை அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.