மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக உருவாகியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் எரிபொருள் தேவையை சமாளிக்கும் திட்டங்கள் குறித்து விவாதித்தனர். மேலும், அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார்.